அதிர வைக்கும் ஜிகிரி தோஸ்த்து! – நம்ம வீட்டு பிள்ளை புதிய ப்ரோமோ

siva karthikeyan
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:42 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியானது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அனு இமானுவேல் நாயகியாகவும், பரோட்டா சூரி வழக்கம்போல சி.காவின் நண்பனாகவும் நடித்துள்ளனர்.

இமான் இசையில் ”எங்கண்ணே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலின் முழு வீடியோ நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. ட்ரைலரில் ஏற்கனவே பார்த்த காட்சிகளே இதிலும் இடம் பெற்றிருந்தாலும் “ஜிகிரி தோஸ்த்து” என்ற பாடல் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்து போயிருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஆடியோவாக வெளியாகி ஹிட் அடித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியான படங்கள் ஏறத்தாழ எல்லாமே வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.


இதில் மேலும் படிக்கவும் :