வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (22:33 IST)

ராஜஸ்தானை ராமேஸ்வரத்திற்கு மாற்றிய சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டிய நிலை இருந்தது. இந்த பாடல் காட்சியை ராஜஸ்தான் மணல் பகுதியில் படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என தெரிகிறது 
 
 
மூன்று நிமிட பாடல் காட்சிக்கு எதற்காக ராஜஸ்தான் வரை சென்று பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு பதிலாக அதே மணல் பரப்பு உள்ள ராமேஸ்வரத்தில் படமாக்கலாம் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஐடியா கொடுத்ததாகவும், இந்த ஐடியாவை ஏற்றுக் கொண்ட இயக்குனர் பாண்டிராஜ், அந்த பாடலை ராமேஸ்வரத்திலேயே எடுத்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
 
இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல லட்ச ரூபாய் செலவு மிச்சம் என்று தெரிகிறது. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் இதேபோன்று திட்டமிட்டு ஒரு படத்திற்கு செலவு செய்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்பதும், மற்ற தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது