திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (16:29 IST)

ஏது சிவகார்த்திகேயனா? அரசியல்வாதிகளின் வாயில் வெந்து நூடுல்ஸாகும் விஜய்!

சசிகலா புஷ்பா, விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படங்களோடு தனது படத்தை ரிலீஸ் செய்து மோதட்டும் என தெரிவித்துள்ளார். 
 
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி ரசிகர்கள், சக நடிகர்கள் ஆகியோர் மத்தியில் இல்லாத கேள்வி அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆம், சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய்தான் இருக்கிறார். யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், அப்படி இருக்கையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, சினிமா தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். 
விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு நிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள். அப்போது வசூலில் யார் கில்லி என்று தயாரிப்பாளர்கள் கூறிவிடுவார்கள். ரஜினிகாந்துக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டும் என கூறியுள்ளார்.