காதல், பாசம் , சென்டிமெட்....வெயிட்டாக வந்திறங்கிய "நம்ம வீட்டு பிள்ளை" ட்ரைலர்!

Papiksha| Last Updated: சனி, 14 செப்டம்பர் 2019 (18:49 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்ப உறவுகள், பாசம் , காதல் , சண்டை, கலகலப்பு என அனைத்தும் கலந்த கிராமிய படமாக உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாடல்கள் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவின் தங்கையாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் அண்ணனாக சூரி கலகலப்பான காமெடியில் பின்னி எடுக்கிறார். இந்த படத்தின் மூலம் சூரி விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். 
 
கபடி , சேவல் சண்டை , ஜல்லிக்கட்டு , என முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா ரேஞ்சில் அணைத்து மசாலாக்களும் கலந்து கமர்ஷியலாக வந்திறங்கியுள்ளது நம்ம வீட்டு பிள்ளை ட்ரைலர். 


இதில் மேலும் படிக்கவும் :