செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:36 IST)

ரம்ஜானில் இருந்து ஓணத்திற்கு மாறிய மோகன்லால் திரைப்படம்!

ரம்ஜானில் இருந்து ஓணத்திற்கு மாறிய மோகன்லால் திரைப்படம்!
ரம்ஜான் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த மோகன்லாலின் திரைப்படம் ஓணம் அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி திரைப்படம் ’மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ (Marakkar Arabikadalinte Simham) இந்த திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி ரம்ஜான் திருநாளின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது என்பதும் புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஓணம் திருநாளின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தற்போது கேரளாவில் திரையரங்குகளை மூட கேரள அரசு உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. படக்குழுவினர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு திருப்தி அளித்தாலும் ஓணம் திருநாளில் ரிலீஸ் என்ற அறிவிப்பு ஆறுதல் அடைய செய்துள்ளது.