முதல் முதலாக கேமராவுக்குப் பின்னால்… இயக்குனராக மோகன்லால்!

Last Modified வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:28 IST)

மோகன் லால் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் அவரின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் மோகன்லால் பர்ரோஸ் என்ற 3 டி படத்தை இயக்கி அதில் பர்ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் இந்தியாவுக்கு வந்து செல்வங்களை சேர்த்த வாஸ்கோடகாமாவின் சொத்துகளைப் பாதுகாத்த பர்ரோஸ் என்பவரை பற்றியது. முக்கியக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க பிருத்விராஜும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் மோகன்லால் மற்றும் தான் இருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.இதில் மேலும் படிக்கவும் :