வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (20:57 IST)

சூப்பர் ஸ்டாரின் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது நடிப்பில் த்ரிஷயம் 2 படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விரைவில் கமல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷயம் 2 படம் தெலுங்கில் ரிமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிக்கவுள்ளனர்.

 
இந்நிலையில் இப்படத்தில் இன்று நடிகை பூர்ணா இணைந்துள்ளார்.இவர் வழக்கறிஞராக நடிக்கவுள்ளார்.

மேலும் த்ரிஷ்யம் 1 பாகத்தை தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியா தற்போது தேர்தல் வேலைகளில் இருப்பதால் இப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கல் அதிகரித்துள்ளது.

எனவே  பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தியேட்டரில் ரிலீஸ செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஓடிடியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அதில், வெங்கடேஷ்- மீனா நடிப்பில் 40 நாட்களில்  உருவாகியுள்ள த்ரிஷ்யம்-2 படத்தையும் ஒடியியில் ரிலீஸ் செய்யத்திட்டமிட்டுள்ளதால் இப்படம்  விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.