வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (12:42 IST)

இந்த வயசில்… அதுவும் அந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்ஸ்ரா? சூப்பர் ஸ்டார் நடிகரின் விபரீத ஆசை!

மலையாள நடிகர் மோகன்லால் பிரியதர்ஷன் இயக்கும் புதிய படத்தில் பாக்ஸராக நடிக்க உள்ளாராம்.

மலையாள இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் நடிகர் மோகன்லாலுக்கும் மிகப்பெரிய அளவில் கெமிஸ்ட்ரி உண்டு. இதுவரை இருவரும் சேர்ந்து 25க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இப்போது அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். ஆனால் விஷயம் அதுவல்ல. அந்த படத்தில் மோகன்லால் பாக்ஸராக நடிக்க உள்ளார் என்பதுதான்.

மலையாள நடிகர்களில் மோகன்லால் பெருத்த தொப்பை கொண்ட உடலமைப்பை கொண்டவர். அவர் உடலை வைத்துக் கொண்டு பாக்ஸராக நடிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அந்த படத்துக்காக கடுமையாக உடல் பயிற்சி செய்து மோகன்லால் உடலை பிட்டாக்கி வருகிறாராம்.