ரஹ்மானோடு இசையமைப்புப் பணிகள்… மாமன்னன் அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!
மாமன்னன் திரைப்படத்தின் இசையமைப்புப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் மாமன்னன் 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.