திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:57 IST)

மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்க போகிறாரா கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக்கான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன.

இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் சுப்புலட்சுமியாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷையே அணுகியுள்ளார்களாம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்காததால் இந்த படம் தொடங்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.