1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (07:57 IST)

இந்தி திணிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

Udhayanidhi
இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் அக்டோபர் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது 
 
இது இந்தி படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஒன்றிய பாஜக அரசு இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் சம உரிமை கொண்ட மொழிகள் ஆகும் என்று பாஜக அரசுக்கு புரிய வைக்க உள்ளோம்
 
எனவே இந்தியை திணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து அக்டோபர் 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva