1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (12:51 IST)

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான தசரா ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர்

dasara
கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான தசரா ஃபர்ஸ்ட்லுக்: மாஸ் போஸ்டர்
 நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான தசரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் என்ற ‘வெண்ணலா’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
பிரபல தெலுங்கு நடிகர் நானி இந்த படத்தில் ஹீரோவாகவும் கீர்த்திசுரேஷ் ஹீரோயினாகவும் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
 
ஆந்திராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சமுத்திரக்கனி, சாய்குமார் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva