திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (11:14 IST)

பிரபல நடிகை கல்லீரல் பாதிப்பால் மரணம்! – திரையுலகினர் அஞ்சலி!

Subi Suresh
மலையாளத்தில் பிரபலமான நடிகையான சுபி சுரேஷ் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல திரைப்பட - சீரியல் நடிகை சுபி சுரேஷ் காலமானார். கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 34. ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கல்லீரல் நோய் காரணமாக கடந்த 15 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

சுபி 23 ஆகஸ்ட் 1988 இல் பிறந்தார். சுபி மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். நடிகையாகவும், நகைச்சுவை ரோல்களிலும், மாடலாகவும் கவனம் பெற்றவர் சுபி சுரேஷ். சினிமாலா என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுபி.

அபரன்மர் சாஹிர், கனக சிம்ஹாசனம், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், துப்பறிவாளன், பாய் எல்சம்மா, லக்கி ஜோக்கர், கில்லாடி ராமன், ஐ லவ் மீ, பஞ்சவர்ணத்தாட்டம் போன்ற பல படங்களில் நடித்தவர் சுபி. அவரது இழப்பிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.