1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (09:31 IST)

‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ்’ விழாவில் சிறந்த நடிகராக விருது பெற்ற குரு சோமசுந்தரம்

தமிழில் பல படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் குரு சோமசுந்தரம்.

தமிழில் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா என ஆரம்பத்தில் கலக்கிய குரு சோமசுந்தரம், அதன் பின்னர் அவரின் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்காமல் தடுமாறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மின்னல் முரளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில் ஷிபு என்ற ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் இப்போது இந்த கதாபாத்திரத்துக்காக ஆசியன் அகாடெமிக் கிரியேட்டிவ் விழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.