மலையாள திரையுலகில் பகீர்: 42 இடங்களில் ஐடி ரெய்டு!
சில முக்கிய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
பிரபல மலையாள நடிகர்-தயாரிப்பாளரான பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களின் "வெளிப்படையாத வெளிநாட்டு முதலீடுகளை" கண்டறிய கேரளா, தமிழ்நாடு மற்றும் மும்பையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் காலை 8 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல்கள் நள்ளிரவு வரை நடந்தது என்று தெரிய வந்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக செய்தி. சந்தேகத்திற்கிடமான வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனைகள் மற்றும் வெளியிடப்படாத முதலீடுகள் ஆகியவற்றைக் கண்டறிய இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மலையாளத் திரையுலகின் சில விநியோகஸ்தர்கள் மற்றும் நிதியாளர்களும் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிருத்விராஜ் சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரனின் கோல்டு படத்தில் நடித்தார். இது லிஸ்டின் ஸ்டீபனுடன் அவரது பேனரான பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸால் தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன காந்தாரா படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.
ஆண்டனி பெரும்பாவூரின் பேனர் ஆசீர்வாத் சினிமாஸ் த்ரிஷ்யம் தொடர், மற்றும் பிருத்விராஜின் இயக்கத்தில் லூசிபர் மற்றும் ப்ரோ டாடி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனியின் சமீபத்திய தயாரிப்புகளில் மாலிக் மற்றும் கோல்ட் கேஸ் ஆகியவை அடங்கும்.