வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:30 IST)

''நிறமிழக்கிறேன்''...சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஜினி பட நடிகை!

mamtha mohandoss
நடிகை மம்தா மோகன் தாஸ் விட்டிலிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான மயோக்கம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் மம்தா மோகன் தாஸ்.

இவர் பஸ் கண்டக்டர், அட்புதம், சிவப்பதிகாரம் ஆகிய படங்களிலும், ரஜினியின் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக  வலம் வரும் அவர், விட்டிலிகோ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 

ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்து அதில் இருந்த குணமடைந்து வந்த நிலையில், தற்போது விட்டிலிகோ என்ற நிறமிழப்பு   நோயா பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதனால் அழகையும் நிறத்தையும் இழந்து வருகிறேன் எனத் தெரிவித்து, உங்கள் அன்பு வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.