''தோனி எல்லோருக்கும் ஒரு நல்ல இன்ஸ்பிரேசன்'' - பிரபல நடிகர்
மலையாள சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபுவின்டே மக்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் டொவினோ தாமஸ்.
அதன்பின்னர், 7 வது நாள், நாம், தீவண்டி, மாரடோனா, மாரி 2, லூசிபர், வைரஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மின்னல் முரளி, வாஷி ஆகிய படங்களில் வெளியானது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி புகழ்ந்துள்ளார் டொவினோ தாமஸ்.
அதில் கேப்டன் கூல் உடன் நேரம் செல்விட்டேன். அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. திரையில் பார்ப்பது போல் நேரிலும், அவர் கூலாகவும் தன்னடக்கமுள்ள, திறமையான மனிதர்தான்.
நாங்கள் இருவரும் உரையாடிய போது எங்கள் பேச்சில் சிந்தனைப் பற்றியவையே இடம்பெற்றது. அவரை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக உணர்கிறேன். தோனி எல்லோருக்கும் ஒரு நல்ல இன்ஸ்பிரேசன் என்று தெரிவித்து, அவருட்ன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.