வியாழன், 21 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (11:17 IST)

நான்கு நாட்களில் அமரன் படம் தமிழகத்தில் வசூல் செய்தது இவ்வளவா?

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் (அக்டோபர் 31) தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அமரன் படம் முதல் நாளில் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னிலையில் இருந்தது. உலகளவில் 150 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் முதல் நான்கு நாட்களில் இந்த படம் சுமார் 77 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வரை அஜித், விஜய், ரஜினி மற்றும் கமல் தவிர வேறு எந்த நடிகரின் படங்களும் இந்தளவுக்கு வசூலைக் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.