திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (09:19 IST)

‘சர்தார்’ தெலுங்கு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஹீரோ… கார்த்தி நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை முன்னணி நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஆஹா ஓடிடி இந்த படத்தை வாங்கி ரிலீஸூக்குப் பின் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்தார் படத்தின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் ‘அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுபற்றி நடிகர் கார்த்தி நாகார்ஜுனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த தோழா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.