திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (15:40 IST)

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்… இணைந்த KGF ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக KGF உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றிய அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.