ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (15:55 IST)

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருக வழிபாட்டு பலன்கள் !!

Lord Muruga
மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று வீட்டில் முருகப் பெருமானுக்கு வழிபாடு செய்வது நல்லது.


இப்படி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை இன்னல்களும் நீங்கி, இனி வர இருக்கும் ஆபத்துகளும் உங்களை நெருங்காமல் ஓடி விடும். முருகன் காக்கும் கடவுளாக நின்று உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பார்.

கார்த்திகை நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அன்று காலையில் எழுந்து வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும். பூஜையில் முருகன் படத்தை வைத்து சந்தன, குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முருகன் சிலை வைத்திருப்பவர்கள் தண்ணீர், பால், மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்து கொள்வது நல்லது.

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகனை வணங்கும் விதமாக 6 அகல் விளக்குகளை தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இது போல் அந்த அகல் விளக்குகளை வைத்தே பூஜையும் செய்யலாம்.