சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (07:39 IST)

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் சிம்பு உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கப்பட்டு மொத்த படமும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை சமீபத்தில் ஒரு முன்னணி நிறுவனத்தால் கைப்பற்றப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்தவொரு தமிழ்ப் படமும் விற்காக தொகைக்கு (சுமார் 150 கோடி ரூபாய்) இந்த படம் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.