செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (12:57 IST)

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டு ‘தாங்குமா தமிழகம்’ என்ற அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; குறிப்பாக வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது என்று அவர் கூறியிருந்தது மக்களை வெகுவாகவே எழுச்சி பெற வைத்துள்ளது
 
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு வீட்டில் இருந்து பொதுமக்கள், தற்போது டாஸ்மாக்கை திறந்துவிட்டதால் தாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் வீண் என்ற ஆத்திரத்தில் உள்ளனர். அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் நேற்றைய கமல்ஹாசனின் காரசாரமான அறிக்கை
 
இந்த நிலையில் சற்றுமுன் மேலும் ஒரு அதிரடியான டுவீட்டை பதிவு செய்து டாஸ்மாக்கை திறந்துவிட்ட தமிழக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமா தமிழகம்’. கமல்ஹாசனின் இந்த டுவீட்டும் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.