திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (08:43 IST)

மதுக்கடையை மூடிதான் ஆட்சியை தொடங்கினார்! – கமல்ஹாசன் கண்டனம்!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது ஆபத்தை உருவாக்கும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மதுக்கடை திறப்பதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “ஊரடங்கு அமலில் இருக்கும்போது எதன் அடிப்படையில் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. தற்போது எவரின் வழிகாட்டுதலின்படி அரசு செயல்படுவதாக சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடிதான் ஆட்சியை தொடங்கினார். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய அரசு இது. மது யாருடைய அத்தியாவசிய தேவை? அதன் வருமானத்தை நம்பியிருக்கும் அரசுக்கா? சாராய ஆலைகளின் விற்பனை குறைவதை எண்ணி கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சிகளுக்கா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.