வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (14:57 IST)

அண்ணாத்தவுடன் மோத திட்டம் போடும் விக்ரம்? கமல்-ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் கழித்து ரஜினி – கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி அத்தியாயத்திற்கு பிறகு ரசிகர்கள் அதிகம் குவிந்து நின்றது ரஜினி-கமல் என்ற ஆதரவு நிலைப்பாட்டில்தான். ஆரம்ப காலம் முதலே ரஜினி – கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீசானால் அது ரசிகர்களுக்கு பெரும் முக்கிய நாளாக அமைந்து விடுவதுண்டு.

அப்படியொரு தருணம் மீண்டும் அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

அதேசமயம் மறுபக்கம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஒரே சமயத்தில் தொடங்கியுள்ள இந்த படத்தின் பணிகள் முடிந்து இரு படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. கடந்த 2005ல் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ், ரஜினியின் சந்திரமுகி ஒரே நாளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.