வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:54 IST)

ஆந்திர முதல்வரின் செயலால் அதிருப்தி அடைந்த ஜூனியர் என் டி ஆர் !

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்கலைக் கழகம் ஒன்றுக்கு தன்னுடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான YSR பெயரை சூட்ட உள்ளார்.

ஆந்திர அரசு அண்மையில் 1986 ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் என் டி ராமராவ்வால் தொடங்கப்பட்ட என்டிஆர் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்எஸ்ஆர் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அன்ட் சையின்ஸ் என மாற்ற உள்ளதாக அறிவித்தது.

இது இப்போது என் டி ஆர் குடும்பத்தினர் மத்தியில் அதிருபதியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அவர் “இருவருமே பிரபலமான தலைவர்கள். இப்படி பெயர் மாற்றுவது YSR –ன் புகழைக் கூட்டாது. அதே போல என் டி ஆரின் புகழையும் மங்க செய்யாது. மக்களின் இதயங்களில் அவருக்கு உள்ள இடத்தை அழிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.