வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (19:34 IST)

குழந்தையைப் பற்றிய கேளவியால் கடுப்பான ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ!

Ram Charan
தனது குழந்தையைப் பற்றிய கேள்விக்கு ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம்சரண் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  நடிப்பில் ராஜமெளலி இயகக்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் –கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்.சி.15. இப்படத்தின் ஷூட்டிங் பிரமாண்டமாக  நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  ராம்சரண் – உபாசனர் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவர்கள் இன்னும் குழந்தைப் பெற்றுக்கொள்ளாதது பற்றி  கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ராம்சரண், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். அதனால்,அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை சினிமாவில் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புள்ளது. அதேபோல் தனிப்பட்ட வாழ்விலும் உயரங்களை அடைய வேண்டிய  பொறுப்பு எனக்கும் உள்ளது என் மனைவிக்கும் உள்ளது இதற்கிடையில் குழந்தைப் பெற்றுக்கொள்ளும்  எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.