ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவின் படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் தனுஷை வைத்து இயக்கிய அசுரன் படத்திற்குப் பின், சூரியின் நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இப்படம் மீண்டும் தொடங்க 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகிறது.
இதற்கிடையே ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்ததாகவும் தனக்கு என ஒரு கதையை தயார் செய்யும்படியும் அதில் தான் நடிப்பதாகவும், அப்படத்தை இயக்க ரூ.30 சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது எனக்கு விருப்பம் இல்லை என வெற்றிமாறன் கூறியதாகத் தெரிகிறது.
வெற்றிமாறனின் இந்தப் பதில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது