ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (23:15 IST)

''கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள்''தென்னிந்திய நடிகர்களை முந்திய நடிகைகள்

இணையதள புரட்சி நடந்து வரும் இக்காலத்தில் எந்த ஒரு தகவலைப் பெறவும் அனைவரும்  உடனடியாக செல்போனிலிருந்து கூகுள் செய்தால் ஒரு தகவல் அல்ல அதுகுறித்த பல தகவல்களைக் கொட்டும்.

அந்த வகையில், இந்த 2022 –அரையாண்டில் ஆசியாவில் அதிகம் தேடப்பட்டவர்களில் 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

அதில்,    நடிகர்களை விட நடிகைகள் இப்பட்டியலில் முன்னணியி இடம் பிடித்துள்ளனர். புஷ்பா பட ஹீரோ 19 வது இடத்திலும், நடிகர் விஜய் 22 வது இடத்திலும், கேஜிஎப் பட ஹீரோ யஷ் 40 வது இடத்திலு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு 47 வது இடத்திலும், ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோக்கள் ராம்சரண், ஜூன்யர் என்.டி.ஆர் முறையே 53 மற்றும் 58 வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மேலும், சூப்பர் ஸ்டார் 77, தனுஷ்61, சூர்யா 63 வது இடத்தைப் பிடித்துள்ளனர். இது  தென்னிந்திய நடிகர்களின் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில், தென்னிந்திய நடிகைகளில் சமீபத்தில் திருமணம் முடிந்த காஜல் அகர்வால் 15 வது இடத்திலும், புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து புகழ்பெற்ற சமந்தா 18 வது இடத்திலும், விஜய்66 பட நடிகை ராஷ்மிகா 20 வது இடத்திலும்,  சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நயன் தாரா 33 வது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.