செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (11:22 IST)

ரஜினி படத்தில் நடிக்கும் ‘ஜோக்கர்,’ குருசோமசுந்தரம்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஜோக்கர் பட நாயகன் குருசோமசுந்தரம் இணைந்து இருக்கிறார்.
 
ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்து வரும் படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் புதிதாக குருசோமசுந்தரம் இணைந்து இருக்கிறார். இவர், ‘ஜோக்கர்,’ ‘பாம்பு சட்டை,’ ‘ஓடு ராஜா ஓடு’ உள்பட பல படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வளர்ந்து வரும் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இது ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படம். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.. இப்போது, குருசோமசுந்தரமும் இணைந்திருப்பதால், படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
 
அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே 2 கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தன. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.