1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (17:50 IST)

என்னை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்தனர் - கவுதம் மேனன் பேட்டி

நடிகர் ரஜினியோடு இணைந்து படம் செய்வதை யாரோ தடுத்து விட்டனர் என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

 
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என பெயரெடுத்தவர் கவுதம் மேனன். தற்போது தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது :
 
துருவ நட்சத்திரம் கதையை முதலில் நான் ரஜினியிடம்தான் கூறினேன். அவருக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் எனக் கேட்டார். நான் தயாரிப்பாளர் தானுவுடன் சென்றிருந்தேன்.
 
இந்த படத்தை நாம் செய்வோம். நீ யாரிடம் கூறாதே. வீட்டில் மட்டும் சொல்லிவிடு என தாணு என்னை சந்தோஷமாக அனுப்பி வைத்தார்.  நான் என் டீமுடன் அமர்ந்து இப்படத்தை எப்படி செய்யலாம் என ஆலோசித்து வந்தேன். அன்று மாலை தொலைப்பேசியில் அழைத்த தாணு, ஏதோ பிரச்சனை.. ரஜினியிடம் யாரோ எதையோ கூறியிருக்கிறார்கள். இது இப்போது நடக்காது. ரஞ்சித்தான் இயக்குனர் என என்னிடம் கூறினார்.
 
என்னை பற்றி ரஜினியிடம் யார் என்ன கூறினார்கள் என தெரியவில்லை என ஆதங்கத்துடன் கவுதம் மேனன் பேட்டியளித்துள்ளார்.