திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (17:21 IST)

ஜோக்கர் பட நடிகைக்கு விரைவில் திருமணம்!

ஜோக்கர் படத்தில் சமூக போராளியாக நடித்த காய்த்ரி கிருஷ்ணாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
 
தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தில் சமூக போராளியாக ’இசை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் காய்த்ரி கிருஷ்ணா. மேலும், இவர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
இந்நிலையில், இவருக்கும் கேரளாவை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜுக்கும் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திருமண நிச்சயதார்தம் முடிந்தது. அவர்களின் திருமணம் அடுத்து வருடம் நடைபெறவுள்ளது.