திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (13:49 IST)

எல்லாம் ஏமாற்று வேலை ; ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - டிடிவி தினகரன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் போராடுவது ஏமாற்று வேலை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களாகவே பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
 
இந்நிலையில், தஞ்சாவுரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “அதிமுக எம்.பி.க்கள் செய்வது ஏமாற்று வேலை. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதை தடுக்கவே அவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் விளக்கம் கூட கேட்கவில்லை. இவர்கள் ஊழல்வாதிகள். எனவே, கைது மற்றும் ரெய்டுக்கு பயந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
 
எங்கள் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கி வைத்துவிட்டதால் நடராஜனுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அப்படிப்பட்டவர்கள் ஏன ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டார்கள். எனக்காக ஏன் ஆர்.கே.நகர் தொகுதியில் வேலை பார்த்தார்கள்? ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்” என அவர் பதலளித்தார்.