வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:57 IST)

ஜெயிலர் படத்துக்கு தமிழ் நாட்டில் சிறப்புக் காட்சி இல்லையா?

ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.

இந்த படத்துக்கு யுஏ சான்றிதழ் சென்சாரால் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 43 நிமிடமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இப்போதே  முன்பதிவு தொடங்கியுள்ளது.

நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்துக்கு தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகள் இருக்காது என சொல்லப்படுகிறது. முதல் காட்சியே காலை 9 மணிக்குதான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் சிறப்புக் காட்சி இருக்கும் என சொல்லப்படுகிறது.