வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (14:19 IST)

நடிகர் அஜித் புகைப்படத்தைப் பதிவிட்டு போலீஸ் அதிகாரி அறிவுரை

சிவகங்கை மாவட்டம் உதவி சூப்பிரண்டன்ட் ஸ்டாலின் ஐபிஎஸ் தன் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்  நடிகர் அஜித் புகைப்படம் பதிவிட்டு இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் துணிவு படத்திற்குப் பின்  தன் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில்  நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியான நிலையில், விரைவில் இப்படம் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

நடிகர் அஜித் திரைப்படங்களுக்கு இடையே தன்னுடைய மோட்டார் சைக்கிள் குழுவோடு உலக நாடுகளை சுற்றி வருகிறார். அதன்படி, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளை தன்னுடைய இந்த சுற்றுப்பயண திட்டத்தில் முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  சிவகங்கை மாவட்டம் உதவி சூப்பிரண்டன்ட் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் தன் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,. பைக்கில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள்…தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று பதிவிட்டுள்ளார்.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் நிறைய பேர் பைக் ரைடிங் செய்யும் நிலையில் அவர்கள் பைக் பயணம் செய்து வரும் நிலையில், காவல்துறை அதிகாரியின் இந்தப் பதிவு கவனம் பெற்றுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.