ஆஸ்கர் வாய்ப்பு நழுவிப் போன ’’இந்திய படம்’’ ! ரசிகர்கள் ஏமாற்றம்
சினிமா கலைஞர்களின் பெரும் கனவாக இருப்பது ஆஸ்கார் விருது. இது சினிமா உலகில் உச்ச பட்ச விருதாகக் கருதப்படுகிறது.
சர்வதேசப் படங்களுக்கு என தனிப்பட்ட விருதும் ஆஸ்கார் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் இவ்விருதுக்காக சும்ர் 93 நாடுகள் கலந்துகொண்டன. இதில், அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. நார்வே, ருமானியா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகளின் படங்கள் இவ்விருதிற்குப் போட்டியிடவுள்ளன. மார்ச் 5 முதல் 9 ஆம் தேதி வரை நடக்கவுள்ள வாக்குப் பதிவில் இந்நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மலையாள சினிமாப்படமான ஜல்லிக்கட்டு படம் இந்த வாய்ப்பை இழந்துள்ளது.அடுத்துவரும் மார்ச் 15 ஆம் தேதி நாமினேஷன் சுற்றில் உள்ள படங்கள் அறிவிக்கப்படும். ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.