ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:56 IST)

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளும் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பல்வேறு அறிவிப்புகளும் சலுகைகளும் வெளியாகும் என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
 
ஆனால் அதே நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் செய்வோம் என்று கூறுவதை அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே செய்து வருவதால் கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகிய அதிரடி அறிவிப்புகளை அடுத்து தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்,
 
காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது