1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:03 IST)

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அனைத்து வழக்குகளும் வாபஸ் - முதல்வர் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ்!
 
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானதில் நேற்று ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
 
தொடர்ந்து இன்று பல்வேறு  சட்ட முடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் செய்ய முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் பதிலுரையின் போது அறிவித்துள்ளார்.