வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (22:36 IST)

''5 ரூபாய் கொடுத்தாலும் உதவிதான்!'' -குஷ்புவை சாடிய அம்பிகா!

ambika
பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக  இருங்கள் என்று குஷ்புவை சாடியுள்ளார் நடிகை அம்பிகா.
 
சமீபத்தில் சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு  ஆர்ப்பாட்டத்தில்  பாஜக நிர்வாகி குஷ்பு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போடுவார்களா? என்று  அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்திருந்தார். 
 
இது சர்ச்சையானது. இதற்கு சமூக ஆர்வலர்களும், திமுகவினரும், பெண்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை அம்பிகா தன் வலைதள பக்கத்தில்,  எந்தக் கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்வதைப்  பற்றியும், மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் பற்றி ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவியுங்கள்...அப்படி பாராட்ட மனமில்லை எனில் அமைதியாக இருங்கள்.... பிச்சை என அவமானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் ரூ.5 கொடுத்தாலும் அது உதவிதான் என்று தெரிவித்துள்ளார்.