வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (21:39 IST)

துரை தயாநிதி வேறு மருத்துவமனைக்கு மாற்றம்!

duirai dhaynithii
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணா நிதியின் மகன் மு.க. அழகிரி. இவர் முன்னால் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
 
இவரது மகனும் சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
 
இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.