பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பாமக!
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் 2024-க்காக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலிலும், தமிழ் நாட்டில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
கூட்டணி குறித்து முடிவெடுக்க நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக பாமக கூட்டவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
பாமக , அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இப்போது, பாஜகவுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.