1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:35 IST)

கடும் நெருக்கடி கொடுப்பவர்களுக்கு விஷால் கூறிய பதில்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு, எதிராக சில தயாரிப்பாளர்கள்  போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.
விஷால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார், கியூப் பிரச்சனை, தமிழ் ராக்கர்ஸ் என பல காரணங்களை காட்டி அவர் மீது புகார் தெரிவித்து சங்க கட்டிடத்துக்கு பூட்டியுள்ளனர். மேலும் அவர் சங்க பணத்தை முறைகேடு  செய்துள்ளதாகவும், அதற்காக தான் இளையராஜாவுக்கான விழாவை நடத்துவதாகவும் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் விஷால் இந்த பிரச்சினை குறித்து கூறுகையில் அவர்களுக்கு இளையராஜாவுக்கு எடுக்கும் விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எண்ணம். முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும், விழா திட்டமிட்டபடி நடக்கும் என  கூறியுள்ளார்.