திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:49 IST)

தமிழ் ராக்கர்ஸுடன் பார்ட்னர்ஷிப் ! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள்!

நடிகர் விஷால்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூடிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டு போர்கொடி தூக்கியுள்ளனர்.


 
பொதுக்குழுவில் நடக்கும் பிரச்சனைகளை சேர்ந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்க தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் . தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் . சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் மீது கண்டிப்பு காட்டப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அவர்கள் விஷால் மீது முன் வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தமிழ் திரைப்பட தயார்ப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அதன் ஒரு பகுதியிலாக சென்னை தி நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்திற்கு பூட்டு போட்டு சாவியை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல். அழகப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் விஷால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் சங்கத்திற்கான நிரந்த வைப்பு தொகை ரூ. 7 கோடி எங்கே போனது என்று தெரியவில்லை. அதற்கு பொறுப்பான பதிலை கூறாத விஷால் சங்க பிரச்னை தொடர்பான பொதுக்குழுவை கூட்டவில்லை என்று கூறினார் அழகப்பன். 
 
மேலும் பொதுக்குழுவில் நடக்கும் பிரச்சனைகளை சங்கத்தினருடன் ஆலோசிக்காமல் தன்னிசையான முடிவுகளை அவர் எடுத்து வருகிறார் என்றும் . தமிழ்ராக்கர்ஸை அழிப்பதாக கூறி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நடிகர் விஷால், தற்போது அந்த இணையதளத்தில் பார்டனராக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
 
 நடிகர் சங்கத்தில் செயலாளராக உள்ள நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவரானது தவறு என ஏ.எல். அழகப்பன் கூறினார். 
 
தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளோம். இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தியதில் உள்நோக்கம் உள்ளது என தெரிவித்தார். 
 
தயாரிப்பாளர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி கூச்சலிட்டதால் தி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.