ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:48 IST)

ஓடி ஒளியும் விஷால்: கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்

பிரச்சனைகளை சந்திக்க முடியாமல் நடிகர் விஷால் ஓடி ஒழிவதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவி ஏற்றுக்கொண்ட இத்தனை காலக் கட்டத்தில் சங்கத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்றவுடன் ஒருசில மாதங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என்று சவால்விட்ட விஷால், இத்தனை மாதங்கள் ஆனபோதிலும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒருசில தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் கூடியிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், விஷாலின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையை கண்டித்தும், உடனடியாக பொதுக்கூட்டத்தை கூட்டி தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனைகளை பேச வேண்டும் என கூறியிருக்கின்றனர். மேலும் வைப்புத் தொகையாக இருந்த 7 கோடி காணாமல் போனது குறித்து விஷால் பதிலளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், 8 கோடி மக்களுக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கூட சுலபமாக பார்க்க முடிகிறது. ஆனால் 2000 உறுப்பினர்களை கொண்ட சங்கத்தின் தலைவர் விஷாலை பார்க்க முடியவில்லை. பிரச்சைகளை சந்திக்க திராணி இல்லாமல் விஷால் ஓடி ஒழிகிறார். இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்த இருக்கிறோம் என அவர் கூறினார்.