திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:49 IST)

மாஸ்டர்பிளான்: பிரச்சனைகளுக்கான தீர்வை முன்பே கூறிய விஷால்!!!

நடிகர் விஷால் கூறியதால் தான் தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தை பூட்டினோம் என தயாரிப்பாளர் ஜே.கே ரித்திஷ் கூறியிருக்கிறார்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவி ஏற்றுக்கொண்ட இத்தனை காலக் கட்டத்தில் சங்கத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்றவுடன் ஒருசில மாதங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என்று சவால்விட்ட விஷால், இத்தனை மாதங்கள் ஆனபோதிலும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒருசில தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் கூடிய தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், விஷாலின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையை கண்டித்தும், உடனடியாக பொதுக்கூட்டத்தை கூட்டி தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனைகளை பேச வேண்டும் என கூறினர். இதற்கு பதிலளிக்க வேண்டிய விஷோலோ அங்கு வரவே இல்லை. இதனால் தயாரிப்பாளர்கள் அந்த கட்டிடத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர்.
இதுகுறித்து பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான ஜே.கே.ரித்திஷ், நாங்கள் வேண்டுமென்றே கட்டிடத்தை பூட்டவில்லை. தேதல் பரப்புரையின் போது விஷாலே தான் நான் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கட்டிடத்திற்கு பூட்டு போடுங்கள் என சொன்னார். அவர் உருப்படியாக வேலை செய்யாததால் தான் இப்பொழுது பூட்டை பூட்டினோம். இதற்கு முழு பொறுப்பும் விஷாலே தான் என கூறினார்.