ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:48 IST)

விஷாலின் கழுத்தை இறுக்கும் சங்க நிர்வாகிகள்: உச்சகட்ட மோதலில் தயாரிப்பாளர்கள் சங்கம்

விஷாலின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க பதவி ஏற்றுக்கொண்ட இத்தனை காலக் கட்டத்தில் சங்கத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அவர் சிறுபட தயாரிப்பாளர்களுக்கு எந்த உதவியையும் செய்வதில்லை எனக் கூறி சமீபத்தில்  தயாரிப்பாளர்களும் நடிகர்களுமான உதயாவும், ஆர்.கே.சுரேஷும் சங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.
 
தலைவர் விஷாலோ, துணைத்தலைவர்கள் கொளதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் தயாரிப்பாளர் சங்க பிரச்சனைகளில் தலையிடாமலும் ஆபிஸுக்கே வராமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். விஷால் பதவி விலக வேண்டுமென போர்கொடிகள் எழுந்தன.
 
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் கூடியிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், விஷாலின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையை கண்டித்தும், உடனடியாக பொதுக்கூட்டத்தை கூட்டி தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனைகளை பேச வேண்டும் என கூறியிருக்கின்றனர். மேலும் வைப்புத் தொகையாக இருந்த 7 கோடி காணாமல் போனது குறித்து விஷால் பதிலளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.