பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்சராஹாசன்!
உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாஸன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் அஜித் நடித்த விவேகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அக்ஷரா ஹாசன் அதன்பின்னர் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது அவர் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஹிந்தியிலும் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடிகை அக்ஷரா ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.