1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (08:22 IST)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிபி சத்யராஜ்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நடிகர் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் அவர் தனது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் என்பதும் அதனை அடுத்து வால்டர், கபடதாரி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது நடிகர் சிபிராஜ் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது