புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (20:45 IST)

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா: இயக்குனர் இந்த பிரபலம் தான்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் தற்போது கால்ஷீட் தேதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
முதன்முதலாக விஜய் ஆண்டனியுடன் ஹன்சிகா இணையும் உள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிம்புவுடன் ஹன்சிகா நடித்து முடித்துள்ள மகா என்ற திரைப்படம் அவரது 50வது படம் என்பதால் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது