வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:42 IST)

சிம்புவுக்கு நன்றி தெரிவித்த காளிதாஸ் ஜெயராம்!

நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் பாடல் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல் எழுதுவது, இசையமைப்பது மற்றும் பாடுவது போன்றவற்றில் ஆர்வமாக இருப்பார். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற சுயாதீன இசை ஆல்ப பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் நடிகர் காளிதாஸ் ‘பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கியுள்ள சிம்பு அண்ணாவுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.